திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா பாண்டறவேடு கூட்டு சாலை அருகே பொதட்டூர்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் ராக்கி குமாரி தலைமையில் போலீசார் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரியில் இருந்து ஒரு கார் மிக வேகமாக வந்தது. அந்த காரை போலீசார் மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அந்த காரில் 2 கிலோ கஞ்சா இருந்தது. கஞ்சா கடத்தியதாக சித்தூர் மாவட்டம் கரகண்டாபுரம் கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் (வயது 32) என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவர் ஓட்டி வந்த காரையும் அதில் இருந்த கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.