மாவட்ட செய்திகள்

கார்கள் மோதல் 2 வாலிபர்கள் படுகாயம்

கார்கள் மோதிக்கொண்டு விபத்துக்கு உள்ளானதில் 2 வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர்.

கயத்தாறு:

கயத்தாறு அருகே உள்ள அய்யனாரூத்து அம்மன் கோவில் தெருவை சேர்ந்த பண்டாரம் மகன் அழகுகனி( வயது 27). இவரும், நண்பரான அதே ஊரைச் சேர்ந்த கிருஷ்ணன் மகன் பேச்சிமுத்து (27) என்பவரும் கயத்தாறில் இருந்து நெல்லைக்கு காரில் சென்று காண்டிருந்தார். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயலாளர் கஜேந்திரன் காரில் நெல்லை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவர் கயத்தாறு அருகே செந்தூர் நாற்கரச் சாலையில் சிறுநீர் கழிப்பதற்காக காரை ஒதுக்கிய போது பின்னால் அழகுகனியும் பேச்சிமுத்துவும் வந்த கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பேச்சிமுத்து, அழகுகனி ஆகிய 2பேரும் காயமடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த 2 பேரையும் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்