மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் அருகே தாயை தாக்கிய மகன் மீது வழக்கு

திருவள்ளூர் அருகே தாயை தாக்கிய மகன் மீது வழக்கு.

தினத்தந்தி

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள கூடப்பாக்கம் குச்சிக்காடு தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் மல்லிகா (வயது 48). இவரது மூத்த மகன் ரஞ்சித், இளைய மகன் அஜித். இந்த நிலையில் நேற்று முன்தினம் ரஞ்சித், அஜித் இடையே தகராறு ஏற்பட்டது. இதை அறிந்த மல்லிகா தனது மகன்களை கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த ரஞ்சித் தனது தாயை தகாத வார்த்தையால் பேசி வீட்டில் இருந்த தீப கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

இதில் காயம் அடைந்த அவர் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றார். அங்கு அவருக்கு 12 தையல் போடப்பட்டது. இது குறித்து மல்லிகா வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக ரஞ்சித் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது