மாவட்ட செய்திகள்

நச்சலூர்-தோகைமலை பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் மீது வழக்கு

நச்சலூர்-தோகைமலை பகுதிகளில் புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் மீது வழக்கு.

தினத்தந்தி

நச்சலூர்,

நச்சலூர் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக குளித்தலை போலீஸ் நிலையத்துக்கு தகவல் வந்துள்ளது. அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது நச்சலூர் வ.உ.சி. நகரை சேர்ந்த முருகேசன் (வயது 46) தனது பெட்டிக்கடைகளில் வைத்து புகையிலைப் பொருட்களை விற்பனை செய்துள்ளார். இதையடுத்து போலீசார் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து, முருகேசன் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதேபோல், தோகைமலை அருகே காவல்காரன்பட்டியில் உள்ள ஒரு பெட்டிக்கடையில் வைத்து புகையிலை பொருட்கள் விற்றதாக அதன் உரிமையாளர் முரளி (55) என்பவர் மீது தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது