மாவட்ட செய்திகள்

நாகை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 33 பேர் மீது வழக்கு

நாகை மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக 33 பேர் மீது வழக்கு.

தினத்தந்தி

நாகப்பட்டினம்,

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி காலை 6 மணி முதல் காலை 10 மணிவரை அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து 10 மணிக்கு மேல் அனைத்து கடைகளும் மூடப்பட்டன.மேலும் கட்டுப்பாடுகளை தீவிர படுத்துவதற்காக ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை மீறுவோர் மீது போலீஸ் துறையினர் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதன்படி நாகை மாவட்டத்தில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் போலீசார் சாலைகளில் இரும்பு தடுப்புகளை அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் முழு ஊரடங்கின் போது போலீசார் சாலைகளில் இரும்பு தடுப்புகளை அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் செல்வோரை அனுமதித்தனர். ஊரடங்கு உத்தரவை மீறியதாக 33 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இதுவரை 24 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது