மாவட்ட செய்திகள்

நடிகை தனுஸ்ரீ தத்தா மீது வழக்குப்பதிவு

ராஜ் தாக்கரே குறித்து அவதூறாக பேசிய விவகாரத்தில் நடிகை தனுஸ்ரீ தத்தா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மும்பை,

இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா, தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில், பிரபல இந்தி நடிகரான நானா படேகர் 2008-ம் ஆண்டு ஒரு சினிமா படப்பிடிப்பில் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இந்தநிலையில் அவர் அளித்த மற்றொரு பேட்டியில், மறைந்த பால்தாக்கரேயை தொடர்ந்து அவர் வகித்து வந்த சிவசேனா தலைவர் பதவியை பெற ராஜ்தாக்கரே விரும்பினார். ஆனால் அவரால் முடியவில்லை.

2008-ம் ஆண்டு வெளியான ஆர்ன் ஓகே பிளீஸ்... படத்தில் இருந்து விலக முடிவு செய்ததற்காக தன்னுடைய வாகனம் நொறுக்கப்பட்ட சம்பவத்தில் நவநிர்மாண் சேனா கட்சியினருக்கு தொடர்பு உள்ளது. நவநிர்மாண் சேனா கட்சியினர் தொடர்ந்து எனக்கு அச்சுறுத்தல் விடுத்து வருகின்றனர். சமீபத்தில் கூட 2 பேர் தன் வீட்டிற்குள் நுழைய முயற்சி செய்தனர் என்றார்.

இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் பீட் மாவட்ட நவநிர்மாண் தலைவர் சுமந்த் தாஸ் என்பவர், காஜி போலீஸ் நிலையத்தில் நடிகை தனுஸ்ரீ தத்தா மீது புகார் கொடுத்தார். இதில் அவர் நவநிர்மாண் சேனா கட்சி தலைவர் ராஜ் தாக்கரே மீது நடிகை அவதூறு பரப்புவதாக கூறியிருந்தார்.

இதன்பேரில் போலீசார் நடிகை தனுஸ்ரீ தத்தா மீது அவதூறு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு