திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட மாடுகளை படத்தில் காணலாம். 
மாவட்ட செய்திகள்

திருப்பூர் சந்தையில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை

திருப்பூர் மாட்டுச்சந்தையில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை நடைபெற்றது.

தினத்தந்தி

மாட்டுச்சந்தை

திருப்பூர் பல்லடம் ரோடு தென்னம்பாளையத்தில்

ள்ள தினசரி மார்க்கெட்டில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று மாட்டுச்சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், உடுமலை, குன்னத்தூர், பெருமாநல்லூர் உள்பட பல பகுதிகளில் இருந்தும் மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது வழக்கம்.

இதேபோல் நேற்று மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இருந்தும், திருவண்ணாமலை, ஈரோடு, மற்றும் கோவை மாவட்டத்திற்குட்பட்ட பல பகுதிகளிலிருந்தும் கன்றுகுட்டிகள் உள்பட சுமார் 1300-க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் கன்றுக்குட்டிகள் அளவிற்கு தகுந்தாற்போல் ரூ.11 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரைக்கும் விற்பனையானது.

ரூ.2 கோடி

இதேபோல் மாடுகள் அதன் ரகம் மற்றும் அளவிற்கு தகுந்தாற்போல் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரைக்கும் விற்பனை செய்யப்பட்டது. குறிப்பாக கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் கேரள மாநில வியாபாரிகள் அதிக அளவில் மாடுகளை வாங்கி சென்றனர்.

நேற்று ஒரே நாளில் சுமார் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை