மாவட்ட செய்திகள்

செல்போன் கடை பூட்டை உடைத்து பணம் திருட்டு

ஸ்ரீமுஷ்ணத்தில் செல் போன் கடை பூட்டை உடைத்து பணம் திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

ஸ்ரீமுஷ்ணம்,

ஸ்ரீமுஷ்ணம் செங்குந்தர் தெருவை சேர்ந்தவர் செல்வம்(வயது 51). இவர் ஸ்ரீமுஷ்ணம் கடைவீதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று முன்தினம் முழு அடைப்பு காரணமாக மதியம் 3 மணியளவில் கடையை திறப்பதற்காக வந்தார். அப்போது கடை ஷட்டரின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.

இதைபார்த்து அதிர்ச்சியடைந்த செல்வம் கடையை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது கல்லாபெட்டியில் இருந்த ரூ.32 ஆயிரத்து 600-யை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்த தகவல் அறிந்த ஸ்ரீமுஷ்ணம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து திருட்டு நடந்த கடையை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது