மாவட்ட செய்திகள்

செல்போனில் பெண்ணுக்கு ஆபாச தொல்லை ஆம்புலன்ஸ் ஊழியர் கைது

செல்போனில் பெண்ணுக்கு ஆபாச தொல்லை கொடுத்த ஆம்புலன்ஸ் ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

நவிமும்பை வாஷியை சேர்ந்த பெண் ஒருவருக்கு செல்போனில் மர்மஆசாமி ஒருவர் அடிக்கடி அழைப்பு விடுத்து ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்து வந்தார். மேலும் ஆபாச குறுந்தகவல்களையும் அனுப்பினார்.

இதனால் எரிச்சல் அடைந்த அந்த பெண் வாஷி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரில், மர்மஆசாமி தனக்கு போன் செய்யும் போதெல்லாம் ஆம்புலன்ஸ் சைரன் சத்தம் கேட்பதாக கூறியிருந்தார். இதனால் அந்த ஆசாமி ஆம்புலன்ஸ் ஊழியர் என்று தெரியவந்தது.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் அலைவரிசை மூலம் அந்த எண் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து ஆசாமியை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர் நெருல் 20-வது செக்டரை சேர்ந்த சந்தோஷ் தேவாசி என்பதும், பேலாப்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் ஆம்புலன்ஸ் ஊழியராக பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.

அவர் வாஷியை சேர்ந்த பெண்ணிடம் ஆபாசமாக பேசியதை ஒப்புக் கொண்டார். அவர் பெண்களிடம் ஆபாசமாக பேசுவதற்கு என்றே தனி சிம் கார்டை போலி ஆவணங்களை தாக்கல் செய்து கொடுத்து தெரியவந்தது.

பெண்களிடம் ஆபாசமாக பேசியது தொடர்பாக அவர் மீது ரபாலே, என்.ஆர்.ஐ. போலீஸ் நிலையங்களிலும் வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு