மாவட்ட செய்திகள்

மின்சார ரெயில் சேவையில் மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு

சென்னை கடற்கரை, ராயபுரம் மற்றும் வண்ணாரப்பேட்டை ரெயில் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட ரெயில்களின் வழித்தடங்கள் மாற்றப்பட்டுள்ளன.

சென்னை,

தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

*கும்மிடிபூண்டி- சென்னை கடற்கரை மின்சார ரெயில் (வண்டி எண்:42608), இரவு 9.40 மணிக்கு கும்மிடிபூண்டியில் இருந்து புறப்படும் மின்சார ரெயில் இன்று முதல் வரும் 24-ந்தேதி வரை கொருக்குப்பேட்டை வழியாக பேசின் பிரிட்ஜ் வழித்தடத்திற்கு மாற்றப்பட்டு சென்னை கடற்கரை ரெயில் நிலையத்திற்கு பதிலாக சென்னை சென்டிரல் ரெயில் நிலையம் வந்தடையும்.

* சென்னை கடற்கரை- அரக்கோணம் மின்சார ரெயில் (63801), மதியம் 1.20 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும் மின்சார ரெயில் இன்று முதல் வரும் 24-ந்தேதி வரை சென்னை சென்டிரலில் இருந்து புறப்படும்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு