மாவட்ட செய்திகள்

டெங்கு கொசு ஒழிப்பு பணியை கலெக்டர் நேரில் ஆய்வு

நல்லம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணியை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் நலன் கருதி தனியார் காலிமனைகள், குடியிருப்பு பகுதிகள், கட்டுமானபணியிடங்கள், திருமண மண்டபங்கள், சந்தைகள், பொதுமக்கள் கூடும் இடங்கள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து இடங்களில் கொசுப்புழுக்களை உருவாக்கும் வகையில் தேங்கியுள்ள குப்பைகள், கழிவு பொருட்களை அகற்ற காலக்கெடு விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்கள் உருவாவதை தடுப்பதற்கான ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நல்லம்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமங்கள், அரசு மற்றும் தனியார் கட்டிடங்கள், பொது இடங்களில் கலெக்டர் விவேகானந்தன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். டெங்கு கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளதா? என்று அப்போது பார்வையிட்டார்.

தவிர்க்க வேண்டும்

ஏ.ஜெட்டிஅள்ளியில் டெங்கு ஒழிப்பு பணிகளை ஆய்வு செய்த கலெக்டர் அந்த பகுதியில் குவித்து வைக்கப்பட்டிருந்த தேங்காய் மட்டைகளை பார்வையிட்டார். அவற்றில் தண்ணீர் தேங்கி டெங்கு கொசுப்புழுக்கள் உருவாகி உள்ளதா? என சோதனையிட்டார். பொது இடங்களில் இவ்வாறு தேங்காய் மட்டைகள், டயர்கள் போட்டு வைக்கப்படுவதை தவிர்க்க வேண்டும் என்று அப்போது அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன், தாசில்தார் ரேவதி, வட்டார வளர்ச்சி அலுவலர் அமரவேல், வட்ட வழங்கல் அலுவலர் ராஜராஜன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர். தர்மபுரி மாவட்டத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) முதல் பொது இடங்கள், குடியிருப்பு பகுதிகளில் அதிகாரிகள் மேற்கொள்ளும் ஆய்வின்போது டெங்கு கொசுப்புழுக்கள் இருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்