மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டு, காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகங்களில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

செங்கல்பட்டு, காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலகங்களில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நடைபெற்றது.

தினத்தந்தி

சமூக நீதி நாள் உறுதிமொழி

தந்தை பெரியார் பிறந்த தினமான செப்டம்பர் மாதம் 17-ந்தேதி சமூக நீதி நாளாக தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது. இதையொட்டி செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ராகுல் நாத் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்களுடன் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. அப்போது மாவட்ட கலெக் டர் உறுதிமொழி வாசிக்க அதனை அனைத்து துறை அரசு ஊழியர்களும் வாசித்து ஏற்று கொண்டனர்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வகுமார் மற்றும் அனைத்து அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

காஞ்சீபுரம்

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மக்கள் நல்லுறவு மையகூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி, தலைமையில் சமூக நீதி நாளையொட்டி சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. அப்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதேவி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் மகாராணி மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது