பூந்தமல்லி,
வடபழனி மசூதி தெருவை சேர்ந்தவர் பஷீர் (வயது 31). இவர் பூந்தமல்லியில் உள்ள ஏ.டி.எம். எந்திரம் தயார் செய்யும் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். குடிநீர் தட்டுப்பாடு காரணமாக மனைவியை ஆரணியில் உள்ள சொந்த ஊருக்கு அனுப்பிவிட்டு பஷீர் மட்டும் தனியாக வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். மாலை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 4 பவுன் தங்க நகை திருடப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வட பழனி போலீசார் விசாரித்து வந்தனர்.