சேலம்,
சென்னை-சேலம் இடையே 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்காக காஞ்சீபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதற்கு பொதுமக்களும், விவசாயிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இதனிடையே சுற்றுச்சூழல் அனுமதி கிடைக்காவிட்டால் 8 வழி பசுமைச்சாலை திட்டம் கைவிடப்படும் என்று ஐகோர்ட்டில் மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் சேலம் ஜருகுமலை பகுதியில் மண் பரிசோதனை செய்யும் பணி போலீஸ் பாதுகாப்போடு நடைபெற்றது.