மாவட்ட செய்திகள்

தேனியில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தேனியில் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தினத்தந்தி

தேனி:

மத்திய தொழிற்சங்கங்கள், அரசு ஊழியர், ஆசிரியர் மற்றும் விவசாயிகள் சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய அளவில் வருகிற 28, 29-ந்தேதிகளில் பொது வேலைநிறுத்த போராட்டம் நடக்கிறது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், தொழிலாளர் சட்ட தொகுப்புகளை கைவிட வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்கக்கூடாது என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்த போராட்டம் நடக்கிறது.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கம் சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம், தேனி பழைய பஸ் நிலையம் முன்பு நேற்று நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முருகன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க தாலுகா செயலாளர் ராஜேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் தர்மர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

ஆந்திர எம்.எல்.ஏ. மீது இளம்பெண் பாலியல் புகார்; நடவடிக்கை எடுக்கக்கோரி ரோஜா போராட்டம்

தலைவர்கள், தொழில் அதிபர்களுக்கு பிரதமர் மோடி விருந்து

ஜன.30-ல் மேற்கு வங்காளம் செல்கிறார் அமித்ஷா

2047-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் 400 விமான நிலையங்கள்: பிரதமர் மோடி

7 முறை எம்.எல்.ஏ... அஜித் பவாரின் குடும்ப, அரசியல் வாழ்க்கை விவரம் வெளியீடு