மாவட்ட செய்திகள்

மாநகர பஸ் கண்ணாடி உடைப்பு; வாலிபர் கைது

மாநகர பஸ் கண்ணாடி உடைப்பு; வாலிபர் கைது.

ஆவடி,

செங்குன்றத்தில் இருந்து ஆவடி நோக்கி நேற்று முன்தினம் இரவு மாநகர பஸ்(தடம் எண் 61 ஆர்) வந்து கொண்டிருந்தது. பஸ்சில் 50 பயணிகள் இருந்தனர். ஆவடியை அடுத்த கோவில்பதாகை பெருமாள் கோவில் அருகே பஸ் வந்தபோது அங்குள்ள ஒரு மதுக்கடையில் மது அருந்தி விட்டு வெளியே வந்த வாலிபர் ஒருவர், திடீரென சாலையில் கிடந்த கல்லால் அடித்து மாநகர பஸ்சின் பின்பக்க கண்ணாடியை உடைத்தார். நல்லவேளையாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதுபற்றி பஸ் டிரைவர் சிவா (வயது 34) அளித்த புகாரின்பேரில் ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் கண்ணாடியை அடித்து உடைத்த அதே பகுதியை சேர்ந்த ஜெயசீலன் (23) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்