மாவட்ட செய்திகள்

சாக்கடையை சுத்தப்படுத்தும் ரோபோ கருவியின் செயல்விளக்கம், பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது

புதுவையில் சாக்கடைகளை சுத்தப்படுத்தும் பணியில் ரோபோவை ஈடுபடுத்துவது தொடர்பான செயல்விளக்கம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது.

புதுச்சேரி,

நகர பகுதிகளில் கழிவுநீர் வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டு சாலைகளில் பொங்கி வழியும் போது பாதாள சாக்கடைக்குள் பணியாளர்கள் இறங்கி சுத்தம் செய்வது வழக்கம். அந்த பணியில் ஈடுபடும் போது சில நேரங்களில் விஷவாயு தாக்கி உயிரிழக்கும் அவலம் ஏற்படும்.

கடந்த 2010-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை இது போன்ற பணியில் ஈடுபட்டவர்களில் 1470 பேர் விஷவாயு தாக்கி உயிர் இழந்துள்ளனர். இதனை தடுக்கும் வகையில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் சாக்கடைகளை சுத்தப்படுத்தும் பணியில் முதன்முறையாக ரோபோ ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.

புதுவை மாநிலத்திலும் இந்த ரோபோவை செயல்படுத்துவது தொடர்பான செயல்விளக்கம் நேற்று மிஷன்வீதியில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மகாலிங்கம் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது.

பண்டிகோட் என பெயரிடப்பட்ட இந்த ரோபா, ஒரு மணி நேரத்தில் 4 சாக்கடைகளை சுத்தம் செய்யும். ஜென் ரோபோட்டிக்ஸ் என்ற நிறுவனம் இந்த ரோபோவை வடிவமைத்துள்ளது. வைபை, புளுடூத் வசதிகளுடன் கூடிய இந்த ரோபோவில், சாக்கடைகளை சுத்தப்படுத்த ஏதுவாக கை போன்ற வடிவமைப்பும், அதனை கட்டுப்படுத்தும் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன. ரோபோவை கட்டுப்படுத்துவதற்கான கட்டளைகளை, அந்தந்த மாநில மொழிகளில் மாற்றிக் கொள்ளும் வகையிலும் ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது.

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு