மாவட்ட செய்திகள்

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ‘பயோமெட்ரிக்’ கருவி கலெக்டர் ஆனந்த் வழங்கினார்

ரேஷன் கடை ஊழியர்களுக்கு ‘பயோமெட்ரிக்’ கருவிகளை திருவாரூர் கலெக்டர் ஆனந்த் வழங்கினார்.

தினத்தந்தி

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின்கீழ் ரேஷன் கடை ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் கருவிகளை கலெக்டர் ஆனந்த் வழங்கி, அதன் பயன்பாட்டை தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் பொது வினியோக திட்டத்தின்கீழ் மின்னணு குடும்ப அட்டையில் (ஸ்மார்ட் ரேஷன் கார்டு) பெயர் உள்ளவர்கள் மட்டுமே ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்குவதற்கான பயோமெட்ரிக் கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஊழியர்களுக்கு பயிற்சி

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 714 ரேஷன் கடைகளை சேர்ந்த ஊழியர்களுக்கும் பயோமெட்ரிக் கருவியை பயன்படுத்துவதற்கான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் கூறினார். நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயராமன், மாவட்ட வழங்கல் அதிகாரி லதா, பொது வினியோக திட்ட துணை பதிவாளர் அப்துல்சலீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு