மாவட்ட செய்திகள்

மாணவர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்

திருவள்ளூரில் மாணவர்களுடன் கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கினார்.

திருவள்ளூரில் உள்ள கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 10 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 10-வது மற்றும் 12-வது பயிலும் கல்வியில் சிறந்து விளங்கும் 20 மாணவர்கள் பங்கேற்க காபி வித் கலெக்டர் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகளை வழங்கினார்.

பின்னர் கலெக்டர் மாணவ, மாணவியர்களுக்கு புத்தகங்களை பரிசாக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆறுமுகம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் பூபால முருகன், அம்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் செல்வ கணேசன், பள்ளி ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்