மாவட்ட செய்திகள்

சோளிங்கர் அருகே ஓடை கால்வாயில் தரைப்பாலம் அமைக்க கலெக்டர் நடவடிக்கை 40 ஆண்டுகால கோரிக்கைக்கு தீர்வு

சோளிங்கர் அருகே ஓடை கால்வாயில் தரைப்பாலம்கட்டவேண்டும் என்ற 40 ஆண்டுகால கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

சோளிங்கர்,

சோளிங்கரை அடுத்த ஏரிமுன்னூர் ஏரிக்கு பொன்னை அணைக்கட்டு பகுதியில் இருந்து தண்ணீர் வரும் ஓடை கால்வாய் உள்ளது. இந்த கால்வாயை கடந்துதான் 300 ஏக்கர் விவசாய நிலத்திற்கும், இறந்தவர்களின் உடல்களை சுடுகாட்டுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

இதனால் கடந்த 40 ஆண்டுகளாக ஓடை கால்வாயில் தரைப்பாலம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த நிலையில் ஏரிமுன்னூர் கிராமத்தில் 70 வயது விவசாயி ஒருவர் இறந்து விட்டார்.

40 ஆண்டுகால கோரிக்கை

அவருடைய உறவினர்கள் ஓடை கால்வாய் தண்ணீர் வழியாக உடலை எடுத்து சென்று அடக்கம் செய்தனர். இது குறித்து கிராமமக்கள் கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ்-க்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு கலெக்டர் உத்தரவிட்டதாக தெரிகிறது. இதனால் வட்டார வளர்ச்சி அலுவலர் பார்த்தசாரதி சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர் பாலம் அமைப்பதற்காக நீளம் அளவீட்டு பணிகள் நடைபெற்றது. ரூ.70 லட்சத்தில் பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

பாலம் கட்ட உடனடியாக நடவடிக்கை எடுத்த கலெக்டருக்கு கிராம மக்கள் நன்றி தெறிவித்தனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்