மாவட்ட செய்திகள்

உல்லாசம் அனுபவித்து விட்டு திருமணம் செய்ய மறுத்த கல்லூரி பேராசிரியர் கைது

உல்லாசம் அனுபவித்து விட்டு பள்ளி ஆசிரியையை திருமணம் செய்ய மறுத்த கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்டார்.

பண்ருட்டி,

பண்ருட்டி அருகே உள்ள ஏ.புதூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னமணி (வயது 28). தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியையான 27 வயது இளம்பெண் ஒருவரும் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். அப்போது சின்னமணி, ஆசிரியையிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பல இடங்களுக்கு அழைத்து சென்று உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் சின்னமணி வீட்டுக்கு சென்ற ஆசிரியை, அங்கிருந்த தனது காதலரை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். அதற்கு சின்னமணி திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்ததோடு தனது தந்தை கோபாலகிருஷ்ணன்(60), சித்தப்பா ரவிச்சந்திரன்(48), உறவினர்கள் ஜெயக்குமார்(38), சுப்பிர மணியன் மனைவி முத்துலட்சுமி(50) ஆகியோருடன் சேர்ந்து, ஆசிரியையை தாக்கியதாக தெரிகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில் கோபாலகிருஷ்ணன் உள்பட 5 பேர் மீது பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து, கல்லூரி பேராசிரியர் சின்னமணியை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கோபாலகிருஷ்ணன் உள்பட 4 பேரை தேடி வருகிறார்கள். உல்லாசம் அனுபவித்து விட்டு தனியார் பள்ளி ஆசிரியையை திருமணம் செய்ய மறுத்த கல்லூரி பேராசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்