மாவட்ட செய்திகள்

செல்போனில் பேசியதை தந்தை கண்டித்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

செல்போனில் பேசியதை தந்தை கண்டித்ததால் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சென்னை புதுவண்ணாரப்பேட்டை அம்மணிஅம்மன் தோட்டம் 4-வது தெருவைச் சேர்ந்தவர் கந்தன். கட்டிட மேஸ்திரி. இவருடைய மனைவி ஜெயந்தி. இவர்களுடைய 2-வது மகள் மேனகா (வயது 19). இவர், தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று காலை மேனகா, செல்போனில் யாருடனோ நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தார். இதை பார்த்த அவருடைய தந்தை கந்தன், மகள் மேனகாவை கண்டித்தார். இதனால் மனம் உடைந்த மேனகா, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது இரண்டு கை மடிக்கட்டு பகுதியிலும் கத்தியால் அறுத்துக்கொண்டதுடன், வீட்டின் படுக்கை அறையில் புடவையால் தூக்குப்போட்டு கொண்டார். அக்கம் பக்கத்தினர் மேனகாவை அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், மேனகா ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறிவிட்டார்.

சம்பவம் குறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்