மாவட்ட செய்திகள்

ஆசிரம நிர்வாகியை கைது செய்யக்கோரி கம்யூனிஸ்டு போராட்டம்

கல்லூரி மாணவியின் சாவுக்கு ஆசிரம நிர்வாகியை கைது செய்யக்கோரி கம்யூனிஸ்டு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் வெங்கல் அருகே உள்ள செம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகள் ஹேமமாலினி (வயது 20). தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இவர் அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் ஊத்துக்கோட்டை அருகே உள்ள வெள்ளாத்துக்கோட்டை கிராமத்தில் ஆசிரமம் நடத்தி வரும் நாட்டு வைத்தியர் முனுசாமி (50) என்பவரிடம் சிகிச்சை பெற்று வந்தார். சில நாட்களுக்கு முன்பு ஆசிரமத்தில் தங்கியிருந்த ஹேமமாலினி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தன் மகளின் சாவில் மர்மம் இருப்பதாக ஹேமமாலினியின் பெற்றோர்கள் பென்னலூர் பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கல்லூரி மாணவியின் சாவுக்கு ஆசிரமம் நடத்தி வரும் முனுசாமி தான் காரணம், அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு லெனினிஸ்ட் கட்சியினர் ஊத்துக்கோட்டை தாலுகா அலுவலகம் அருகே நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு மாவட்ட செயலாளர் அன்பு தலைமை தாங்கினார். இந்த போராட்த்தில் ஆசிரம நிர்வாகி முனுசாமியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு