மாவட்ட செய்திகள்

நீண்டநாட்களாக காதலித்து விட்டு கல்லூரி மாணவியை திருமணம் செய்ய மறுத்த வாலிபர் கைது

நீண்டநாட்களாக காதலித்துவிட்டு கல்லூரி மாணவியை திருமணம் செய்ய மறுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

குளித்தலை,

கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள செங்குளம் பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம் மகன் லட்சுமணன் (வயது 26). இவர் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

இவருக்கும் கடவூர் பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது, இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் நீண்டநாட்களாக காதலித்து வந்தனர்.

இந்த நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்தப் பெண் லட்சுமணனிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் மறுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்தப் பெண் குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லட்சுமணனை கைது செய்தனர். பின்னர், அவர் குளித்தலை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது