மாவட்ட செய்திகள்

கலர் ஜெராக்ஸ் எடுத்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற அண்ணன்–தம்பி கைது

கலர் ஜெராக்ஸ் எடுத்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட முயன்ற அண்ணன்–தம்பியை போலீசார் கைது செய்தனர்.

தினத்தந்தி

மூணாறு,

இடுக்கி மாவட்டம் தேக்கடியில் உள்ள ஓட்டல் ஒன்றுக்கு காரில் 2 பேர் வந்தனர். பின்னர் அவர்கள் காரை சாலையோரமாக நிறுத்தி விட்டு உணவு சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்டு விட்டு அவர்கள் 2 ஆயிரம் ரூபாய் நோட்டை ஓட்டல் உரிமையாளரிடம் கொடுத்தனர். அந்த ரூபாய் நோட்டை வாங்கி பார்த்த உரிமையாளருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அதனை சோதனை செய்தபோது, கலர் ஜெராக்ஸ் எடுத்தது தெரியவந்தது. இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் ரகசியமாக குமுளி போலீசுக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் ஒற்றப்பாலம் பகுதியை சேர்ந்த சுகேசன் (வயது 47), கிரீசன் (43) என்பதும், இருவரும் அண்ணன்தம்பி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் வந்த, காரில் போலீசார் சோதனை செய்தனர். அதில் கலர் ஜெராக்ஸ் எடுத்த 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் 4 இருப்பது தெரியவந்தது.

அவற்றை பறிமுதல் செய்த போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். கலர் ஜெராக்ஸ் எடுத்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை அவர்கள் புழக்கத்தில் விட முயன்றது தெரியவந்தது. ஏற்கனவே இவர்கள் மீது போலி லாட்டரி சீட்டுகள் அச்சடித்து புழக்கத்தில் விட்ட வழக்கும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது