மாவட்ட செய்திகள்

காமராஜர் நினைவு தினம்: சிலைக்கு, நாராயணசாமி– ரங்கசாமி மரியாதை

காமராஜர் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு முதல்–அமைச்சர் நாராயணசாமி, எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

புதுச்சேரி,

புதுச்சேரி அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் நேற்று பெருந்தலைவர் காமராஜர் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு ராஜா தியேட்டர் சந்திப்பில் உள்ள அவரது சிலைக்கு முதல்அமைச்சர் நாராயணசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அவருடன் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, ஜெயமூர்த்தி எம்.எல்.ஏ., காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர்கள் விநாயகமூர்த்தி, தேவதாஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

என்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக 100 அடி ரோட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த நேரு, காமராஜர் ஆகியோரது உருவ படங்களுக்கு முதல்அமைச்சர் நாராயணசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

புதிய நீதிக்கட்சி சார்பில் காமராஜர் சிலைக்கு கட்சியின் மாநில தலைவர் பொன்னுரங்கம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, காமராஜ், நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புது ஆம்புலன்சுக்கு உதவிய அஜித் பவார்; கடைசியில் அதிலேயே... நினைவலைகளை சோகத்துடன் பகிர்ந்த ஓட்டுநர்

சத்தீஷ்காரில் என்கவுன்ட்டர்: 2 நக்சலைட்டுகள் படுகொலை

சீர்திருத்த விரைவு ரெயிலில் ஏறி நாடு பயணிக்கிறது: பிரதமர் மோடி

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு