மாவட்ட செய்திகள்

திருப்பத்தூரில் பட்டா வழங்கக்கோரி கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்.

திருப்பத்தூரில்பட்டா வழங்கக்கோரி கம்யூனிஸ்டு கட்சி ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் ஹவுசிங் போர்டு காந்தி சிலை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. நகர செயலாளர் டி.ஜாபர்சாதிக் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் காத்தவராயன் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் எஸ்.தயாநிதி தொடங்கி வைத்து பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் மூலம் கிரையம் பெற்றுள்ள வீட்டின் உரிமையாளர்களுக்கு அடி மனை பட்டா வழங்க வேண்டும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை திரும்பப்பெற வேண்டும், கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்க வேண்டும், குடிநீர் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட குழு உறுப்பினர் ஞானசேகரன், ரவி, ரங்கன், கேசவன், ஜோதி, காசி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் காமராஜ் நன்றி கூறினார்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்