மாவட்ட செய்திகள்

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம்

கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து நாகையில் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஒப்பாரி வைத்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தினத்தந்தி

நாகப்பட்டினம்,

நாகை புதிய பஸ் நிலையத்தில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து, இந்திய மாதர் தேசிய சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட செயலாளர் மேகலா தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் லட்சுமி பிரியா, மாநில குழு உறுப்பினர் பாப்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகிவற்றை திரும்ப பெறவேண்டும். சென்னை வண்ணாரப்பேட்டையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதை கண்டிப்பது. சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை திரும்பபெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கியாஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து ஒப்பாரிவைத்தனர். இதில் மாதர் தேசிய சம்மேளனத்தினர் பலர் கலந்து கொண்டனர்.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு