மாவட்ட செய்திகள்

கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வராத பயணிகள் நிழற்குடை

திருவள்ளூரில் கட்டி முடிக்கப்பட்ட பயணிகள் நிழற்குடை பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருவள்ளூர்,

திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி எதிரில் பயணிகளின் வசதிக்காக திருவள்ளூர் பாராளுமன்ற உறுப்பினரின் 2017-2018-ம் ஆண்டு தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து புதிய பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. தற்போது பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையிலும் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக இந்த பயணிகள் நிழற்குடை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்படாமல் உள்ளது.

தற்போது இந்த பயணிகள் நிழற்குடையை யாரும் பயன்படுத்த முடியாத வகையில் அதில் முள்செடிகளை வெட்டிப்போட்டு உள்ளனர்.

இந்த பஸ் நிறுத்தத்தின் முன்பாக பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் வெயில் மற்றும் மழையில் அவதியுற்றபடி நிற்கின்றனர். மேலும் இந்த பயணிகள் நிழற்குடை எதிரே குப்பை தொட்டியும் வைக்கப்பட்டு உள்ளது. அது போக்குவரத்திற்கும் பயணிகளுக்கும் இடையூறாக உள்ளது. அந்த குப்பைதொட்டியை வேறு இடத்திற்கு மாற்றி இந்த பயணிகள் நிழற்குடையை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்