உருளைக்கிழங்கு மண்டி 
மாவட்ட செய்திகள்

மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் விற்பனைக்கு குவிந்த உருளைக்கிழங்கு

மார்க்கெட்டிலிருந்து சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் கேரளாவுக்கு உருளைக்கிழங்கு மூட்டைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

தினத்தந்தி

மேட்டுப்பாளையம்,

மேட்டுப்பாளையம் காந்தி மைதானம் நெல்லித்துறை ரோடு, பழைய நகராட்சி அலுவலக வீதி, எல்.எஸ்.புரம் ஆகிய பகுதிகளில் 75-க்கும் மேற்பட்ட உருளைக்கிழங்கு மண்டிகள் உள்ளன. உருளைக்கிழங்கு வர்த்தகத்தில் மேட்டுப்பாளையம் நகரம் முக்கிய பங்கு வகித்து வருகிறது.

மார்க்கெட்டிலிருந்து சென்னை மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகள் மற்றும் கேரளாவுக்கு உருளைக்கிழங்கு மூட்டைகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.

நேற்றைய மார்க்கெட்டிற்கு கோலாரில் இருந்து 22 லோடு குஜராத்திலிருந்து 10 லோடு நைனிடாலில் இருந்து 4 லோடு, இந்தூரில் இருந்து 3 லோடு, நீலகிரி மாவட்டத்தில் உருளைக்கிழங்கு சீசன் இல்லாததால் 1 லோடு, திம்பத்தில் இருந்து 1 லோடு மட்டும் வந்திருந்தது.

ஏலத்தில் ஊட்டி உருளைக்கிழங்கு (45 கிலோ மூட்டை) ரூ.1050 முதல் ரூ.1450 வரையும், கோலார் உருளைக்கிழங்கு ரூ.800 முதல் ரூ.950 வரையும், குஜராத் உருளைக்கிழங்கு ரூ.680 முதல் ரூ.750 வரையும், நைனிடால் உருளைக்கிழங்கு ரூ.450 முதல் ரூ.530 வரையும், இந்தூர் உருளைக்கிழங்கு ரூ.750 முதல் ரூ.830 வரையும் விற்பனை ஆனது.

வருகிற மே மாதம் நீலகிரி மாவட்டத்தில் உருளைக்கிழங்கு சீசன் தொடங்கிய பின்னர் தான் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டுக்கு உருளைக்கிழங்கு வரத்து அதிகரித்து காணப்படும் என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது