மாவட்ட செய்திகள்

ரூ.40 லட்சத்தில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி

வத்தலக்குண்டு பேரூராட்சியில் ரூ.40 லட்சத்தில் சிமெண்டு சாலை அமைக்கு பணிக்கான பூமி பூஜை நடந்தது.

வத்தலக்குண்டு :

வத்தலக்குண்டு சிறப்பு நிலை பேரூராட்சியில் உள்ள 4 வார்டுகளில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.40 லட்சம் செலவில் சிமெண்டு சாலை மற்றும் கால்வாய் அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது. இதற்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் கே.பி.முருகன் தலைமை தாங்கினார். தி.மு.க. பேரூர் செயலாளர் சின்னதுரை, முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் கனகதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிமெண்டு சாலை அமைக்கும் பணிகளை பேரூராட்சி மன்ற தலைவர் சிதம்பரம் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கவுன்சிலர் சுமதி குமரவேல், மாவட்ட பிரதிநிதி மகேந்திரன், பேரூராட்சி தலைமை எழுத்தர் செல்லப்பாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்