மாவட்ட செய்திகள்

ஒப்பந்ததாரர் கொலை வழக்கில் 8 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க கோர்ட்டு அனுமதி

வடசென்னை அனல் மின்நிலையம் அருகே ஒப்பந்ததாரர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 8 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது.

செங்குன்றம்,

எண்ணூர் பர்மா நகரை சேர்ந்தவர் ஜேம்ஸ்பால் (வயது 45). ஒப்பந்ததாரரான இவர், வடசென்னை அனல் மின்நிலைய பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து வந்தார். வடசென்னை அனல் மின் நிலையத்திற்கு கடந்த வாரம் காரில் சென்ற அவரை அனல்மின்நிலையம் அருகே ஒரு கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தது.

இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மீஞ்சூரை சேர்ந்த குமார் என்கிற ராஜ்குமார் (27), எட்வின் (26), ராஜா என்கிற நித்தேஷ்வரன் (26), நேதாஜி (26), தனுஷ் (24), சூர்யா (24), சந்தோஷ் (25), செல்லா (24) ஆகியோர் பூந்தமல்லியில் உள்ள குற்றவியல் நடுவர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.

இதையடுத்து நீதிபதி உத்தரவின்பேரில் 8 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இது தொடர்பான வழக்கில் இவர்கள் 8 பேரையும் 4 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க பொன்னேரி கோர்ட்டு அனுமதி வழங்கியது. போலீசார் அவர்களை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு