மாவட்ட செய்திகள்

பொங்கல் விளையாட்டு விழா நடத்த நன்கொடை கேட்டதால் தகராறு: ஓட்டல் ஊழியர் கத்தியால் குத்திக்கொலை

தொட்டியம் அருகே பொங்கல் விளையாட்டு விழா நடத்த நன்கொடை கேட்ட தகராறில் ஓட்டல் ஊழியர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.

தினத்தந்தி

தொட்டியம்,

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே உள்ள காட்டுப்புத்தூர் காந்திநகரை சேர்ந்த கோபால் மகன் கோகுல்(வயது21). இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு ஓட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். பொங்கல் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த இவரிடம், அப்பகுதியில் பொங்கல் விளையாட்டு விழா நடத்த அதே பகுதியை சேர்ந்த அருள்சரவணன் என்பவர் நன்கொடை கேட்டார். அப்போது அருள்சரவணனுக்கும் கோகுலுக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்த னர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அருள்சரவணனுக்கும், கோகுலுக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில் அருள்சரவணனுக்கு ஆதரவாக அவரது சகோதரர்கள் முத்து, பிரபு ஆகியோரும், கோகுலின் அண்ணன் கலைவாணன், நண்பர் தமிழரசன் ஆகியோரும் அங்கு வந்தனர். பின்னர் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவர் இரும்பு கம்பி மற்றும் கத்தியால் தாக்கி கொண்டனர்.

இதில் கோகுலுக்கு தலை, நெஞ்சு மற்றும் முதுகு பகுதிகளில் சராமாரியாக கத்தி குத்து விழுந்தன. கலைவாணன், தமிழரசன், அருள்சரவணன் ஆகியோரும் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை அருகில் உள்ளவர்கள் மீட்டு காட்டுப்புத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. கோகுலுக்கு அதிகளவு ரத்தம் வெளியேறியதால் அவரை தொட்டியம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

கலைவாணன், தமிழரசன் இருவரையும் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்த கொலை சம்பவம் குறித்து கோகுலின் அண்ணன் கலைவாணன் கொடுத்த புகாரின்பேரில் காட்டுப்புத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அருள் சரவணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தப்பி ஓடிய பிரபு, முத்து ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த கொலை சம்பவம் காட்டுப்புத்தூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது