மாவட்ட செய்திகள்

சேலத்தில் சமையல் கியாஸ், பெட்ரோல், டீசல் விலை விவரம்

சேலத்தில் சமையல் கியாஸ், பெட்ரோல், டீசல் விலை விவரம் அறிவிக்கப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

சேலம்:

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப எரிபொருள் விலையை தினமும் நிர்ணயிக்கும் நடைமுறைக்கு அரசு அனுமதி அளித்தது. அதன்படி எண்ணெய் நிறுவனங்கள் நாள்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. இந்த நிலையில் 137 நாட்களுக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இதேபோல் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது.

சேலத்தில் நேற்று முன்தினம் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.17-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று 76 காசுகள் உயர்ந்து ரூ.102.93-க்கு விற்கப்பட்டது. இதேபோல் நேற்று முன்தினம் டீசல் லிட்டருக்கு 92.21-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று 77 காசுகள் விலை உயர்ந்து 92.98-க்கு விற்கப்பட்டது. மேலும் ரூ.933.50-க்கு விற்கப்பட்ட சமையல் கியாஸ் சிலிண்டர் நேற்று ரூ.49.50 உயர்ந்து ரூ.983-க்கு விற்பனை செய்யப்பட்டது.

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்