மாவட்ட செய்திகள்

நாமக்கல் மாவட்டத்தில் மேலும் 63 பேருக்கு கொரோனா

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் மேலும் 63 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

தினத்தந்தி

நாமக்கல்:

63 பேருக்கு கொரோனா

நாமக்கல் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அறிவிப்பின்படி நேற்று முன்தினம் வரை 51 ஆயிரத்து 118 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தனர்.

இதற்கிடையே நேற்று புதிதாக மேலும் 63 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்து 181 ஆக அதிகரித்து உள்ளது.

602 பேருக்கு சிகிச்சை

இந்தநிலையில் நேற்று 64 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பினர். மாவட்டத்தில் இதுவரை 50 ஆயிரத்து 89 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். 602 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகமாக நீடித்து வருவதால், பொதுமக்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது