மாவட்ட செய்திகள்

கர்நாடகத்தில் புதிதாக 40,499 பேருக்கு கொரோனா

கர்நாடகத்தில் புதிதாக 40 ஆயிரத்து 499 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

தினத்தந்தி

பெங்களூரு: கர்நாடகத்தில் புதிதாக 40 ஆயிரத்து 499 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

துமகூருவில் 1,804 பேர்

கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கர்நாடகத்தில் நேற்று 2 லட்சத்து 15 ஆயிரத்து 312 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதிதாக 40 ஆயிரத்து 499 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 24 ஆயிரத்து 135 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். துமகூருவில் 1,804 பேர், ஹாசனில் 1,785 பேர், மைசூருவில் 1,341 பேர், மண்டியாவில் 1,340 பேர், தட்சிண கன்னடாவில் 983 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். பாகல்கோட்டையில் 56 பேர், பல்லாரியில் 736 பேர், பெலகாவியில் 390 பேர், பெங்களூரு புறநகரில் 785 பேர், பீதரில் 291 பேர், சாம்ராஜ்நகரில் 261 பேர், சிக்பள்ளாப்பூரில் 863 பேர், சிக்கமகளூருவில் 355 பேர், சித்ரதுர்காவில் 382 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

தாவணகெரேயில் 171 பேர், தார்வாரில் 637 பேர், கதக்கில் 100 பேர், ஹாவேரியில் 55 பேர், கலபுரகியில் 872 பேர், குடகில் 165 பேர், கோலாரில் 491 பேர், கொப்பலில் 162 பேர், ராய்ச்சூரில் 153 பேர், ராமநகரில் 367 பேர், சிவமொக்காவில் 382 பேர், உடுப்பியில் 683 பேர், உத்தர கன்னடாவில் 522 பேர், விஜயாப்புராவில் 151 பேர், யாதகிரியில் 81 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதுவரை கர்நாடகத்தில் 33 லட்சத்து 29 ஆயிரத்து 199 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

5.96 கோடி பரிசோதனை

பெங்களூரு நகரில் 5 பேர், மைசூருவில் 4 பேர், தட்சிண கன்னடாவில் 3 பேர், பாகல்கோட்டை, பெலகாவி, சிக்பள்ளாப்பூர், கதக், ஹாசன், ராய்ச்சூர், சிவமொக்கா, துமகூரு, விஜயாப்புராவில் தலா ஒருவர் என மொத்தம் 21 பேர் நேற்று இறந்தனர். 18 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை.

இதுவரை 38 ஆயிரத்து 486 பேர் உயிரிழந்து உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட 23 ஆயிரத்து 209 பேர் நேற்று குணம் அடைந்தனர். 30 லட்சத்து 23 ஆயிரத்து 34 பேர் இதுவரை குணம் அடைந்து உள்ளனர். 2 லட்சத்து 67 ஆயிரத்து 650 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 5 கோடியே 96 லட்சத்து 6 ஆயிரத்து 693 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டு உள்ளது. கொரோனா பாதிப்பு 18.80 சதவீதமாகவும், உயிரிழப்பு 0.05 சதவீதமாகவும் உள்ளது.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை