திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது மீண்டும் பாதிப்பு வேகமெடுக்க தொடங்கியதால் பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்குகிறது.
கொரோனா தொற்று
திருப்பூர் மாவட்டம் தொழிலாளர்கள் நிறைந்த மாவட்டமாகும் இங்கு ஏராளமான தொழில்கள் இருந்து வருவதால் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள் இவர்கள் வடமாநிலம் மற்றும் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஆவர் இந்த நிலையில் சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் நாடு முழுவதும் கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது
இதன் பின்னர் மத்திய மாநில அரசுள் மேற்கொண்ட தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் காரணமாக பாதிப்பு குறைந்தது இதுபோல் ஊரடங்கும்பல்வேறு கட்டங்களாக விதிக்கப்பட்டதால் கொரோனா தொற்று கட்டுப்பாட்டிற்குள் வந்தது இதன் பின்னர் வழங்கப்பட்ட தளர்வுகளின் காரணமாக இயல்பு வாழ்க்கை திரும்பியது
33 பேருக்கு
திருப்பூர் மாவட்டத்தில் தொழிலாளர்கள் நெருக்கம் அதிகமாக இருந்ததால் கொரோனா பரவலும் வேகமாக இருந்தது தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது. இருப்பினும் மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று இல்லாமல் இல்லைநாள் ஒன்றின் பாதிப்பு கடந்த சில வாரங்களாகவே 15 என்ற அளவில் இருந்து வந்தது
இந்த நியில் தற்போது பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்திலும் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 33 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் திருப்பூர் கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
19 ஆயிரத்தை நெருங்குகிறது
தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 823-ஆக உயர்ந்துள்ளது. இதுபோல் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற 24 பேர் குணமடைந்தனர் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்து 349 ஆக உள்ளது. இதுபோல் 250 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் சிகிச்சை பலன் இன்றி 224 பேர் பலியாகியுள்ளனர்.
இதற்கிடையே திருப்பூர் மாவட்டத்தில் மீண்டும் கொரோனா வேகமெடுத்து வருகிறது. பாதிப்பு எண்ணிக்கை 19 ஆயிரத்தை நெருங்கியுள்ளதால் சுகாதாரத்துறை மீண்டும் கொரோனா வழிமுறைகளை பொதுமக்கள் அலட்சியமின்றி கடைபிடிக்க வேண்டும் எனவும் பொதுஇடங்களில் முககவசம் இன்றி சுற்றினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
அறிவிப்பு பதாகை
சுகாதாரத்துறையின் அறிவிப்பின் காரணமாக மீண்டும் திருப்பூரில் உள்ள தியேட்டர்கள் உள்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முககவசம் கட்டாயம் அணிந்து வந்தால் மட்டுமே பொதுமக்கள் உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். இதனை அறிவிக்கும் விதமாக தியேட்டர்கள் நிறுவனங்கள் முன்பு அறிவிப்பு பலகைகள் மற்றும் பதாகைகளும் வைக்கப்பட்டுள்ளன.
கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அரசின் வழிமுறைகளை பின்பற்றி தொற்றை கட்டுப்படுத்த அரசுக்கு உதவ வேண்டும் என சுகாதாரத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.