மாவட்ட செய்திகள்

மேலாளர், ஊழியர்களுக்கு கொரோனா: நெல்லையில் 3 வங்கிகள் மூடப்பட்டன

நெல்லையில் வங்கி மேலாளர் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து 3 வங்கிகள் மூடப்பட்டன.

நெல்லை,

நெல்லை மாநகர பகுதியில் கொரொனா தொற்று நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. மாநகராட்சி ஆணையாளர் கண்ணன் உத்தரவுப்படி, நகர்நல அலுவலர் சரோஜா அறிவுறுத்தலின்படி பாளையங்கோட்டை மண்டல உதவி ஆணையாளர் பிரேம்குமார் மேற்பார்வையில் அந்த பகுதியில் உள்ள வங்கியில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை ஆஸ்பத்திரி தெருவில் ஒரு வங்கி உள்ளது. அந்த வங்கியில் பணியாற்றும் 3 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேபோல் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் பின்புறம் ஒரு கூட்டுறவு வங்கி உள்ளது. அந்த வங்கியில் பணியாற்றும் 9 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சுகாதார ஆய்வாளர் இளங்கோ தலைமையில் ஊழியர்கள், அந்த 2 வங்கிகளையும் மூடினர். அந்த வங்கிகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

நகைக்கடைக்கு சீல்

நெல்லை டவுன் ஆர்ச் அருகே ஒரு வங்கி உள்ளது. அந்த வங்கியை சேர்ந்த மேலாளர் பாளையங்கோட்டை சாந்தி நகரில் வசித்து வருகிறார். அவருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தச்சநல்லூர் மண்டல ஆணையாளர் அய்யப்பன், சுகாதார ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர்கள் இளஞ்செழியன், முருகன், வனராஜ் ஆகியோர் அந்த வங்கிக்கு சீல் வைத்தனர்.

அதேபோல் கொரோனா தொற்று காரணமாக நெல்லை ஸ்ரீபுரம் எஸ்.என்.ஹைரோட்டில் உள்ள ஒரு நகைக்கடைக்கும் சீல் வைக்கப்பட்டது. அந்த வங்கிகள் அனைத்தையும் 3 நாட்கள் திறக்கக்கூடாது என மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுதினர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு