சென்னை,
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளைக் கொண்ட களப்பணிக் குழுக்களை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த இடங்களில் நடக்கும் கொரோனா தடுப்புப் பணிகளை இந்த குழு கண்காணிக்கும்.
இந்தக் குழுவில் நியமிக்கப்பட்டுள்ள சில அதிகாரிகளை மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சென்னை மாநகராட்சியின் வடக்கு மண்டலத்தில் கூடுதல் டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வாலுக்கு (சென்னை போலீஸ் கமிஷனர்) பதிலாக சி.பி.சி.ஐ.டி. ஐ.ஜி. கபில்குமார் சி.சரத்கார் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கு மண்டலத்தில் கூடுதல் டி.ஜி.பி. ஆபாஷ்குமாருக்கு பதிலாக ஐ.ஜி. கே.பவானீஸ்வரி (பொது), தெற்கு மண்டலத்தில் கூடுதல் டி.ஜி.பி. அம்ரேஷ் புஜாரிக்கு பதிலாக ஐ.ஜி. என்.பாஸ்கரன் (செயலாக்கம்), மேற்கு மண்டலத்தில் கூடுதல் டி.ஜி.பி. அபய்குமார் சிங்கிற்கு பதிலாக ஐ.ஜி. (பொருளாதார குற்றப் பிரிவு) எம்.டி.கணேசமூர்த்தி நியமிக்கப்பட்டு உள்ளனர்.