ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மண்டல நல அலுவலர் மற்றும் மண்டல மருத்துவ அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம், சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி தலைமையில் நேற்று ரிப்பன் கட்டிடத்தில் நடைபெற்றது.
அப்போது மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, சென்னையில் தினசரி 20 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். குறைவாக தடுப்பூசி செலுத்தியுள்ள பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி தடுப்பூசி செலுத்தும் விகிதத்தை அதிகரிக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.