மாவட்ட செய்திகள்

இந்தி நடிகா அர்ஜூன் கபூருக்கு கொரோனா

இந்தி நடிகா அர்ஜூன் கபூருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

தினத்தந்தி

மும்பை,

நாட்டை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் பாலிவுட்டையும் தொடர்ந்து தாக்கி வருகிறது. இந்தி சூப்பர் ஸ்டாரான அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் இந்தி நடிகர் அர்ஜூன் கபூரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்த தகவலை அவர் சமூகவலைதளத்தில் கூறியுள்ளார். அதில், நான் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளேன் என்பதை உங்கள் எல்லோருக்கும் தெரியப்படுத்த வேண்டியது எனது கடமை. நான் நன்றாக உள்ளேன்.

மீண்டு வருவேன்

நோய் அறிகுறிகள் எதுவும் இல்லை. நான் என்னை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். மேலும் டாக்டர்கள் மற்றும் அதிகாரிகள் ஆலோசனையின்படி நடந்து கொள்வேன். நீங்கள் தரப்போகும் ஆதரவுக்கு நன்றி.

எனது உடல்நலம் குறித்து தொடர்ந்து உங்களுக்கு தெரிவிக்கிறேன். இந்த வைரசில் இருந்து மீண்டு வருவனே என்று தெரிவித்து உள்ளார்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது