பழைய பஸ் நிலைய பகுதியை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆய்வு செய்தபோது எடுத்த படம் 
மாவட்ட செய்திகள்

நாமக்கல் மாவட்டத்தில் 7 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படும்; அமைச்சர் சரோஜா தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் 7 இடங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அமைச்சர் சரோஜா கூறினார்.

தினத்தந்தி

பஸ் நிலையத்தை ஆய்வு

தமிழக சமூகநலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ராசிபுரம் புதிய பஸ் நிலைய பகுதியை ஆய்வு செய்தார். பஸ் நிலையத்தில் நவீனப்படுத்தப்பட்ட வணிக கடைகள், காத்திருப்போர் அறை, பஸ்கள் நிறுத்துமிடம், நவீன கழிப்பிடங்கள் உள்பட பல்வேறு வசதிகள் செய்வது குறித்து ஆய்வு செய்தார்.

அப்போது அவர் புதிய பஸ் நிலையத்திற்கு உட்பட்ட நிலம், அருகிலுள்ள நிலங்கள் குறித்து முறையான அளவீடு செய்து விரிவான அறிக்கை தயாரிக்க நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து பயன்பாடற்ற நிலையில் உள்ள பழைய பஸ் நிலைய பகுதியை அமைச்சர் சரோஜா ஆய்வு செய்தார்.

அதன்பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாதாள சாக்கடை

ராசிபுரம் நகராட்சி பகுதியில் பொதுமக்களின் கோரிக்கைகளை ஏற்றும், நகரின் விரிவாக்கத்திற்கு ஏற்பவும், புதிய பஸ்நிலையம் அனைத்து நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்படும். பழைய பஸ் நிலையத்தில் பயன்பாடற்ற நிலையில் உள்ள கடைகளை அகற்றிவிட்டு புதிய நவீன வசதிகளுடன் கூடிய ஷாப்பிங் காம்பளக்ஸ் அமைக்கப்படும். ராசிபுரத்தில் பாதாள சாக்கடை திட்டம்

நிறைவேற்றப்பட்டு உள்ளது. 17,500-க்கும் அதிகமான வீடுகளுக்கு பாதாள சாக்கடையுடன் இணைப்பதற்கான கழிவு நீர் குழாய்கள் அமைக்க பொதுமக்கள் தகுந்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

அப்பொழுதுதான் பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக செயல்படுத்த முடியும். ஏற்கனவே இதற்காக தோண்டப்பட்ட சாலைகள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் புதிய சாலைகளாக அமைக்கப்பட்டுள்ளன.

இதைத் தவிர 34 சாலைகள் ரூ.6 கோடி மதிப்பீட்டில் அடுத்த வாரம் பணிகள் தொடங்கப்படும். அதேபோல் 75 குறுக்கு சாலைகள் மற்றும் பிரதான சாலைகள் அமைக்க ரூ.12 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அடுத்த மாதம் பணிகள் தொடங்கப்படும்.

7 இடங்களில்

நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசிகள் 7 இடங்களில் போடப்பட உள்ளன. அதற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. மாவட்டத்தில் மேலும் 4 அம்மா மினி கிளினிக்குகள் விரைவில் திறக்கப்படும். இவ்வாறு அமைச்சர் சரோஜா கூறினார்.

அப்போது நகராட்சி முன்னாள் சேர்மன் பாலசுப்பிரமணியன், நகராட்சி ஆணையாளர் பிரபாகரன், பொறியாளர் குணசீலன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை