இந்த முகாமில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி கொண்டனர். முகாமை திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் வை.ஜெயகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் தடுப்பூசி செலுத்தி கொள்ள வந்த அனைவரும் முககவசம் அணிந்து, உரிய சமூக இடைவெளியை முறையாக கடைபிடித்து வரவேண்டும் என்று அறிவுறுத்தினார்.
அவருடன் மேல்நல்லாத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் அரிபாபு, ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பில்லா என்கிற சதீஷ்குமார், வார்டு உறுப்பினர் பைரவன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி செயலர் சுகுமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.