மாவட்ட செய்திகள்

கொரோனா விதிமீறல் 3 சலூன் கடைக்காரர்களுக்கு தலா ரூ.1,000 அபராதம்

கொரோனா விதிமீறல் 3 சலூன் கடைக்காரர்களுக்கு தலா ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது.

தினத்தந்தி

பொள்ளாச்சி

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரானா 2-வது அலைவேகமாக பரவி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு சில தளர்வுகளுடன் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இதன் ஒருபகுதியாக மாநகரம் மற்றும் நகராட்சி பகுதிகளில் சலூன் கடைகளை அடைக்க உத்தரவிட்டு உள்ளது. இந்த நிலையில், பொள்ளாச்சியில் அரசின் இந்த உத்தரவினை மீறி நாச்சிமுத்து வீதி, ஆர்.ஆர்.தியேட்டர் ரோடு, டி.கோட்டாம்பட்டி ஆகிய இடங்களில் சலூன் கடைகளை திறந்து வைத்திருப்பதாக சுகாதாரத்துறையினருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து சுகாதாரத்துறையினர் அந்த பகுதியில் சென்று ஆய்வு நடத்தினர். இதில் 3 இடங்களில் கடை திறந்து வைத்திருந்த 3 கடைகளின் உரிமையாளர்களுக்கு வருவாய்த்துறையினர், சுகாதாரத்துறையினர் தலா ரூ.1,000 அபராதம் விதித்தனர்.

மேலும், கொரோனா விதிமுறைகளை மீறி கடை திறந்ததால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்