பெங்களூரு:கர்நாடகத்தில் 34 ஆயிரத்து 47 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூரு நகரில் மட்டும் பாதிப்பு 21 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதனால் சுகாதாரத்துறை அதிர்ச்சி அடைந்துள்ளது.
கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பரிசோதனைகள்
கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 76 ஆயிரத்து 470 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் புதிதாக 34 ஆயிரத்து 47 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதில், பெங்களூருவில் 21 ஆயிரத்து 71 பேர் பாதிக்கப்பட்டனர். பாகல்கோட்டையில் 136 பேர், பல்லாரியில் 566 பேர், பெலகாவியில் 468 பேர், பெங்களூரு புறநகரில் 722 பேர், பீதரில் 178 பேர், சாம்ராஜ்நகரில் 146 பேர், சிக்பள்ளாப்பூரில் 287 பேர், சிக்கமகளூருவில் 135 பேர், சித்ரதுர்காவில் 184 பேர், தட்சிண கன்னடாவில் 782 பேர், தாவணகெரேயில் 244 பேர், தார்வாரில் 634 பேர், கதக்கில் 117 பேர், ஹாசனில் 1,171 பேர் பாதிக்கப்பட்டனர்.
ஹாவேரியில் 55 பேர், கலபுரகியில் 562 பேர், குடகில் 148 பேர், கோலாரில் 552 பேர், கொப்பலில் 80 பேர், மண்டியாவில் 709 பேர், மைசூருவில் 1,892 பேர், ராய்ச்சூரில் 143 பேர், ராமநகரில் 231 பேர், சிவமொக்காவில் 287 பேர், துமகூருவில் 1,373 பேர், உடுப்பியில் 591 பேர், உத்தர கன்னடாவில் 447 பேர், விஜயாப்புராவில் 103 பேர், யாதகிரியில் 33 பேர் பாதிப்புக்கு உள்ளாகினார்கள். கர்நாடகத்தில் இதுவரை 5 கோடியே 89 லட்சத்து 87 ஆயிரத்து 511 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. இதில், 32 லட்சத்து 20 ஆயிரத்து 87 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
பாதிப்பு 19.29 சதவீதம்
நேற்று கொரோனாவுக்கு 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் பெங்களூரு நகரில் 5 பேர், தட்சிண கன்னடாவில் 2 பேர், சிக்பள்ளாப்பூர், ஹாசன், கலபுரகி, மண்டியா, மைசூரு, ராமநகரில் தலா ஒருவர் உயிரிழந்தனர். 22 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. இதுவரை 38 ஆயிரத்து 431 பேர் தங்களது உயிரை பறிகொடுத்து உள்ளனர். நேற்று 5 ஆயிரத்து 902 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதுவரை 29 லட்சத்து 83 ஆயிரத்து 645 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 982 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
கர்நாடகத்தில் நேற்று முன்தினம் 32,793 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று ஒரு நாள் பாதிப்பு 34 ஆயிரத்தை தாண்டி உள்ளதால் சுகாதாரத்துறை கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 19.29 சதவீதமாகவும், உயிரிழப்பு 0.03 சதவீதமாகவும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.