மாவட்ட செய்திகள்

மணப்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டு செயல்பாட்டுக்கு வந்தது

மணப்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டு நேற்று முதல் செயல்பாட்டுக்கு வந்தது

தினத்தந்தி

மணப்பாறை,

மணப்பாறை, வையம்பட்டி, மருங்காபுரி ஆகிய ஒன்றியங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. இந்நிலையில் மணப்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டு தொடங்க வேண்டும் என்று அனைத்து தரப்பில் இருந்தும் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதுதொடர்பாக மணப்பாறைக்கு வந்த கண்காணிப்பு குழுவினர் வந்து பார்வையிட்டு சென்றனர். இதைத்தொடர்ந்து மணப்பாறையில் கொரோனா வார்டு அமைக்கப்பட்டது. அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த போதும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் வராததால் கொரோனா வார்டு செயல்பாட்டுக்கு வருவதில் காலதாமதம் ஏற்பட்டது.

இதையடுத்து நேற்று அனைத்து ஏற்பாடுகளும் முடிவு பெற்றதை அடுத்து கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டனர். இதுமட்டுமின்றி இனி கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மணப்பாறை அரசு மருத்துவமனையில் கொரோனாவிற்கு அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக வார்டில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என்று மருத்துவமனை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை: காரணம் என்ன...? போலீஸ் விசாரணை

அஜித்பவார் உடலுக்கு இன்று இறுதிச் சடங்கு: பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பு

அஜித்பவார் மரணம் ஒரு விபத்து; இதை அரசியலாக்க கூடாது: சரத்பவார்

அனில் அம்பானியின் ரூ.1,800 கோடி சொத்துகள் முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை