மாவட்ட செய்திகள்

கொரோனா வைரஸ் : பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் தயார் நிலையில் தனி வார்டு

கொரோனா வைரஸ் பாதித்தால் சிகிச்சை அளிக்க பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் தயார் நிலையில் தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.

தினத்தந்தி

பெருந்துறை,

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் கொரோனா வைரஸ் காய்ச்சல் தொடர்பான முன் எச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா தலைமயில் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக அனைத்து வசதிகளுடன் கூடிய தனி வார்டு ஏற்படுத்தப்படும் என முடிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 10 படுக்கைகள் கொண்ட தனி வார்டு அமைக்கப்பட்டு உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் யாரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது

தெருநாய்கள் விவகாரம்: மாநில அரசுகளின் செயல்பாடுகள் மீது சுப்ரீம் கோர்ட்டு அதிருப்தி

2028-க்குள் உலக பொருளாதாரத்தில் இந்தியா 3-வது இடம் பிடிக்கும் - பிரதமர் மோடி திட்டவட்டம்

அஜித் பவார் பயணித்த விமானத்தின் கருப்பு பெட்டி மீட்பு