மாவட்ட செய்திகள்

கிரிக்கெட் சூதாட்டம்; வாலிபர் கைது

கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்த ரூ.1½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தினத்தந்தி

பெங்களூரு,

இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கு இடையே 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நியூசிலாந்தில் நடைபெற்றது. இந்தநிலையில் இந்த போட்டியின் போது கிரிக்கெட் சூதாட்டம் நடைபெறுவதாக பெங்களூரு குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பழைய தரகுப்பேட்டையில் உள்ள ஓட்டல் முன்பு வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது அந்த வாலிபர் பெங்களூரு ஸ்ரீராமபுரத்தை சேர்ந்த ராகேஷ் ஜெயின்(வயது 26) என்பதும், இவர் இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட் போட்டியின்போது வெற்றி யாருக்கு என்பது குறித்து செல்போனில் சூதாட்ட தரகர்களுடன் தொடர்பு கொண்டு சூதாட்டத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து ராகேஷ் ஜெயினை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த ரூ.1 லட்சம் ரொக்கம், சூதாட்டத்திற்கு பயன்படுத்திய செல்போன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்

யுஜிசி புதிய வழிமுறைகளுக்கு சுப்ரீம்கோர்ட்டு இடைக்கால தடை

விமான விபத்தில் உயிரிழந்த அஜித் பவார் உடல் தகனம்

ஆதார்கார்டில் மொபைல் எண் மாற்றுவது இனி ரொம்பவே எளிது.. புதிய அம்சம் அறிமுகம்

திருமணம் செய்ய வற்புறுத்திய இளம்பெண்ணை கொன்று நாடகமாடியவர் கைது