மாவட்ட செய்திகள்

வாலிபருக்கு அரிவாள் வெட்டு; தொழிலாளி கைது

தியாகதுருகம் அருகே வாலிபரை அரிவாளால் வெட்டிய தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

கண்டாச்சிமங்கலம்,

தியாகதுருகம் அருகே உள்ள பள்ளிப்பட்டு காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் செம்மலை மகன் பச்சமுத்து (வயது 24). சம்பவத்தன்று பள்ளிப்பட்டில் வசிக்கும் பச்சமுத்துவின் தங்கைக்கும் அவரது கணவர் தொழிலாளியான நாகராஜிக்கும்(26) இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நாகராஜ் தனது மனைவியை தாக்கியதாக தெரிகிறது.

இதற்கிடையே அங்கு வந்த பச்சமுத்து, தகராறை விலக்கி விட்டு தனது தங்கையை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் காட்டுக்கொட்டாய் நோக்கி புறப்பட்டார்.

இதனால் மேலும் ஆத்திரமடைந்த நாகராஜ் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து பச்சமுத்துவை வழிமறித்து தாக்கினார். மேலும் நாகராஜ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பச்சமுத்துவை வெட்டி விட்டு அங்கிருந்து ஓடி விட்டார்.

இதில் காயமடைந்த பச்சமுத்துவை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின்பேரில் நாகராஜ், வேலு, செல்வராஜ், ஏழுமலை ஆகியோர் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிந்து நாகராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிப்ரவரி 4-ல் பிரதமர் மோடி பதில் உரை

விமான விபத்துக்கு முன்... பாதுகாப்பு அதிகாரியுடன் அஜித் பவார் அமர்ந்து இருக்கும் அரிய புகைப்படம் வெளியீடு

முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்வு: ஜனாதிபதி, பிரதமர் பங்கேற்பு

சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் பலன் அளிக்கும்: கேரள பட்ஜெட் பற்றி முதல்-மந்திரி விஜயன் பெருமிதம்

பட்ஜெட் கூட்டத்தொடர்: ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்திற்கு 18 மணிநேரம் ஒதுக்கீடு