மாவட்ட செய்திகள்

சிலிண்டர் டியூப்பை வாயில் சொருகி ரெயில்வே ஊழியர் தற்கொலை - போலீசார் விசாரணை

திருவள்ளூர் அருகே உடல்நலக்குறைவு காரணமாக மனமுடைந்த ரெயில்வே ஊழியர் சமையல் கியாஸ் சிலிண்டர் டியூப்பை வாயில் சொருகிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை,

திருவள்ளூரை அடுத்த வேப்பம்பட்டு இ.பி.காலனியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மகன் கார்த்திக் (வயது 30). ரெயில்வே ஊழியர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக கார்த்திக் உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக அவர் பல மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றும் அவருக்கு உடல்நலம் சரியாகவில்லை என்று தெரிகிறது.

இதையடுத்து, கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர், நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தன் அறைக்குச் சென்று உள்தாழ்ப்பாள் போட்டுக்கொண்டார்.

பின்னர் தனது முகத்தை பிளாஸ்டிக் பையால் மூடிக்கொண்டு, அதில் கியாஸ் சிலிண்டர் டியூப்பை வாயில் சொருகி கொண்டு சுவாசித்தார். இதனால் ஏற்பட்ட மூச்சுத்திணறலில் கார்த்திக் பரிதாபமாக இறந்துபோனார். இதுகுறித்து கார்த்திக்கின் சகோதரி அஸ்வினி செவ்வாப்பேட்டை போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில், போலீசார் விரைந்து வந்து கார்த்திக் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து கார்த்திக்கின் சாவு குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்தியாவுக்கான அமெரிக்க தூதருடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் சந்திப்பு

சத்தீஷ்கார்: 9 சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் பறிமுதல்; பெரிய சதி திட்டம் முறியடிப்பு

டெல்லியில் 5 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

பையில் 2 வெடிகுண்டுகள்... விமான நிலையத்தில் விளையாட்டாக கூறிய தொழிலதிபர்; அடுத்து நடந்தது...

ஒடிசா: மனைவி மீது அதீத பாசம்; தாயை கொன்ற நபர்